‘உன் புருஷனுக்கு கொரோனா… நீயும் தெருவுக்குள்ள வராத…’ வீட்டுக்கு பூட்டு போட்ட கொடூரம்…

கொரோனா பாதிப்புக்குள்ளான கணவனை மருத்துவமனையில் அனுமதித்த பெண்ணை வீட்டிற்கு வர அனுமதித்து மறுத்து பொதுமக்கள் வீட்டிற்கு பூட்ட போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் உள்ள ஆல்காட் கார்டன்ஸ் குடியிருப்பில் வசித்து வரும் பெண் ஒருவர், கொரோனா தொற்றுக்கு ஆளான தன் கணவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, வீடு திரும்பினார்.
அதற்குள் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த பெண்ணுடைய வீட்டுக்கு பூட்டு போட்டதுடன் இந்த பகுதியில் நீங்கள் இப்போது வரக்கூடாது என்று கூறிவிட்டனர். அந்த பெண் இதுபற்றி போலீசாருக்கு தகவல் அளித்தார்.

அதற்குள் மழை பெய்ததால் வீட்டுக்கு செல்ல இயலாமல் கொட்டும் மழையில் நனைந்தபடி அவர் நின்று கொண்டிருந்தார்.
இந்த நிலையில் அங்கு வந்த போலீசார் அந்த பகுதி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானம் செய்து வீட்டை திறக்க வைத்து அந்த பெண்ணை அனுப்பி வைத்தனர்.