தலைநகர் டில்லியில் விடிய விடிய மழை…

இந்தியாவில் பருவமழை இன்னும் சில மாதங்களில் துவங்குகிறது.முன்னதாக பீஹார், டில்லி, அசாம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், தலைநகர் டில்லியின் ராஜ்பாத், மொடிபாத், இந்திரபிரஸ்தா மெட்ரோ ஸ்டேசன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு முதலே பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய துவங்கியது.
மழை தொடர்ந்து பெய்து வருவதால் சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றது. டில்லி நகர் முழுவதும் வெப்பம் தனிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதனால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்றும் டில்லியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.