பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி கொடுக்கப்போகும் வாக்குமூலம்…

டெல்லி: பாபர் மசூதி இடிப்பு வழக்கில், பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான, எல்.கே.அத்வானி, 24ம் தேதி, சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில், வாக்குமூலம் அளிக்க உள்ளார்.
அயோத்தியில் உள்ள பாபர் மசூதி, 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கர சேவகர்களால் இடிக்கப்பட்டது. இதன் பின்னணியில், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்ற மூத்த பாஜக தலைவர்கள் இருப்பதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு, லக்னோவிலுள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கின் விசாரணையை, ஆகஸ்ட் 31க்குள் முடிக்க, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, விசாரணை தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்தான், அத்வானியின் வாக்குமூலத்தை, வரும், 24ம் தேதி, வீடியோ கான்பரஸ் வாயிலாக பதிவு செய்ய வேண்டும் என, சிறப்பு நீதிபதி, எஸ்.கே.யாதவ் உத்தரவிட்டுள்ளார். சிஆர்பிசி சட்டப்பிரிவு 313ன்கீழ், வாக்குமூலம் பதிவு செய்யப்படும்.
அதேபோல், முரளி மனோகர் ஜோஷியின் வாக்குமூலம், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, ஜூலை 23ம் தேதி பெறப்படுகிறது.
ஜூலை 22ம் தேதி, சிவசேனா எம்.பி. சதிஷ் பிரதான், வாக்குமூலத்தை பதிவு செய்வார்.