மாநகராட்சி அலுவலகம் முன்பு திரண்ட நரிக்குறவர்கள்!! தங்கள் உடமைகளை திருப்பி தரக்கோரி கூச்சல்..

நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தை நேற்று நரிக்குறவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.

நாகர்கோவில் அண்ணா பேரூந்து நிலையம், வடசேரி பேரூந்து நிலைய வளாகத்தில் குடும்பத்துடன் தங்கியிருக்கும் நரிக்குறவர்கள் பயணிகளிம் பாசி மணி மாலை, மற்றும் ஊசி, ஊக்கு போன்ற பொருட்களை விற்று வருகின்றனர்.

இவர்கள் பேருந்து நிலைய நடைபாதைகளில் தங்கி பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வருவதாக மாநகராட்சிக்கு தொடர் புகார்கள் வந்தன.

இதைத்தொடர்ந்து வடசேரி பேரூந்து நிலையத்திற்கு சென்ற மாநகராட்சி ஊழியர்களை அங்கிருந்து செல்லுமாறும், பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் பேரூந்து நிலைய நடைபாதையில் அவர்கள் வசிப்பதற்காக வைத்திருந்த சில உடமைகளையும் மாநகராட்சியினர் அகற்றினர்.

இதனால் நேற்று மாநகராட்சி அலுவலகம் முன்பு குழந்தைகளுடன் திரண்ட நரிக்குறவர்கள் ஆவேசத்துடன் கூச்சலிட்டனர். மேலும் மாநகராட்சி ஊழியர்கள் பேரூந்து நிலையத்தில் வைத்திருந்த தங்களது உடமைகளை எடுத்து வந்து விட்டதாகவும், அவற்றை உடனடியாக திருப்பி தரவில்லை என்றால் அங்கிருந்து செல்லப்போவதில்லை என ஆவேசமடைந்தனர். இதனால் மாநகராட்சி அலுவலகம் முன்பு பரபரப்பு நிலவியது.

பின்னர் அவர்களை அழைத்து பேசிய மாநகராட்சி ஊழியர்கள், பேரூந்து நிலையத்தில் பயணிகளுக்கு இடையூறாக நடைபாதைகளில் கும்பலாக அமரக்கூடாது என எச்சரிக்கை விடுத்தனர்.

பின்னர் நரிக்குறவர்களின் உடமைகள் அவர்களிடம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நரிக்குறவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x