‘காதலி முகத்த பாக்கவிடல’ மனமுடைந்த காதலன் தற்கொலை!

சென்னையில் காதல் மனைவி தற்கொலை செய்து கொண்ட விரக்தியில் கணவனும் தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது.
சென்னையின் திருநின்றவூர் பகுதியை சேர்ந்தவர் அரவிந்தராஜன்(வயது 25), இவருக்கும் பட்டாபிராம் பகுதியை சேர்ந்த பவித்ரா(வயது 23) என்பவரும் காதலித்து வந்தனர்.
கடந்த 2016ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வந்துள்ளனர்.ஆனால் திருமணமாகி சில ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு எழ, பவித்ரா அவரது அம்மா வீட்டுக்கு வந்து விட்டார்.
இந்நிலையில் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்திலும் மனுத்தாக்கல் செய்திருந்தார், தன் மனைவியை பிரிய முடியாமல் சோகமாய் இருந்த அரவிந்தராஜன் அடிக்கடி பவித்ராவுக்கு போன் செய்து பேசியுள்ளார்.
விவாகரத்து வழக்கை திரும்பபெறும்படி வற்புறுத்தி வந்துள்ளார், இந்த சூழலில் கடந்த 15ம் திகதி வீட்டில் தனியாக இருந்த பவித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மனைவி இறந்துவிட்டார் என அறிந்ததும் பதறிப்போய் ஓடிய அரவிந்தராஜனை, பவித்ராவின் குடும்பத்தினர் கடைசியாக முகத்தை கூட பார்க்கவிடாமல் தடுத்துள்ளனர்.
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அரவிந்தராஜன், நேற்று தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்னதாக பேஸ்புக்கில், “நானும் பவியும் ரொம்ப லவ் பண்ணி மேரேஜ் பண்ணிக்கொண்டோம். 15-ம் தேதி என்னை பவியின் முகத்தைப் பார்க்க விடல. என்னால அவள் இல்லாம இருக்க முடியல. அதனால் நானும் அவள்கூட போகிறேன். எங்கள் சாவுக்கு காரணம் பவியின் குடும்பத்தினர்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இதுபற்றி வழக்குபதிவு செய்துள்ள திருநின்றவூர் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.