நேபாளத்தில் ஆகஸ்ட் 17ல் விமான சேவை மீண்டும் தொடக்கம்

நேபாளத்தில் உள்நாடு மற்றும் சர்வதேச விமான சேவை அடுத்த மாதம் 17-ம் தேதியிலிருந்து மீண்டும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 20-ம் தேதி விமான சேவைக்கு தடை விதிக்கப்பட்டது.
தற்போது வைரஸ் தாக்கம் குறைந்து வருவதால் உள்நாடு மற்றும் சர்வதேச விமான போக்குவரத்து ஆகஸ்ட் மாதம் 17-ம் தேதியில் இருந்து மீண்டும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காத்மாண்டில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவலை, அந்நாட்டின் சட்டம், நீதி மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஷிவ மாயா தும்பஹங்பே தெரிவித்துள்ளார்.