அண்டாவில் வைத்து அழைத்து செல்லப்பட்ட கர்ப்பிணி… கடைசியில்…?!

சத்தீஸ்கர் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், அங்கு பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த சூழலில், கோர்லா அருகே பிஜாப்பூரைச் சேர்ந்த ஒரு கர்ப்பிணிப் பெண்ணை, மருத்துவமனைக்கு கூட்டிச் செல்ல வேண்டிய சூழல் உருவானது. ஆனால் வெள்ளப்பெருக்கில், எப்படி வெளியே போவது என்று தெரியாமல் அவர் குடும்பத்தினர் தவித்தனர். இதையடுத்து, உறவினர்களும் கிராம மக்களும் உதவ முன்வந்தனர். அவர்கள் ஒரு பெரிய அண்டாவை கொண்டு வந்து கர்ப்பிணிப் பெண்ணை அதில் உட்கார வைத்தனர்.
பின்ன அதை தண்ணீரில் போட்டு, அதை மெல்ல மெல்ல நகர்த்தி, வெள்ளத்தை பத்திரமாக தாண்டினர். வெள்ள நீர் மற்றும் கரடுமுரடான சாலைகள் என்று 15 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து அவர்கள் மருத்துவமனையை அடைந்தனர். அங்கு அனுமதிக்கப்பட்ட பின்னர் மறுநாள் பிரசவ வலி ஏற்பட்டது.
அதற்குள் மருத்துவர் மற்றும் செவிலியர்கள், எங்கள் ஷிஃப் டைம் முடிந்துவிட்டது என்று அலட்சியமாக கூறிவிட்டு, மருத்துவமனையிலிருந்து வெளியேறிவிட்டனர்.
அடுத்த ஷிப்ட் தொடங்கும் வரை எந்த மருத்துவரும் வரவில்லை. நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, ஒரு மருத்துவர் வந்து அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்தார். பிரசவ வார்டுக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், ஒரு அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
தற்போது தாய் மற்றும் குழந்தை நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், டாக்டர்களின் அலட்சியத்தால் பெண் அல்லது குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டால் யார் பொறுப்பு என்று அவரது உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.