சாத்தான்குளம் விவகாரம் ஜெயராஜ் மகளுக்கு அரசு வேலை…

சாத்தான்குளத்தில் காவல்துறை விசாரணையின்போது கொல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர் இன்று வழங்கினார்.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் காவல்துறை விசாரணையின்போது கடுமையாகத் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தில் உள்ள ஒருவருக்குத் தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி ஜெயராஜின் மூத்த மகளும், பென்னிக்சின் சகோதரியுமான பெர்சிக்கு இன்று அரசு பணி வழங்கப்பட்டுள்ளது.

வருவாய்த் துறையில் இளநிலை உதவியாளர் பணிக்கான நியமன ஆணையைத் தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். பணி நியமன ஆணையைப் பெற்றுக்கொண்ட பெர்சி, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,தன் தந்தை, சகோதரர் மரணத்தில் நீதியை நிலைநாட்டத் தமிழக அரசு உதவும் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் மேலும் கொலை வழக்கை விரைந்து விசாரித்து குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தரவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x