சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது காதலி மீது வழக்கு பதிவு!

தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் வழக்கில் முக்கிய திருப்பமாக அவரது காதலியும் நடிகையுமான ரியா சக்கரபார்த்தி உள்ளிட்ட 5 பேர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக எப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 14-ம் தேதி மும்பை பந்த்ராவில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் பாலிவுட் நடிகர் சுசாந்த் சிங் (34) தற்கொலை செய்து கொண்டார். இது பாலிவுட்டில் மட்டுமின்றி இந்திய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நடிகரின் தற்கொலை குறித்து, மும்பை பந்த்ரா போலீசார் இதுவரை சினிமா பிரபலங்கள் அவரது ஊழியர்கள் உள்ளிட்ட 40 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
சில தினங்களுக்கு முன் சுஷாந்த் சிங்கின் சமையலர் மற்றும் அவரது காதலி ரியா சக்கரபார்த்தி ஆகியோருக்கு சம்மன் அனுப்பி மீண்டும் பல மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில் சுசாந்த் சிங் ராஜ்புத்தின் தந்தை, காதலி ரியா சக்கரபர்த்தி மீது பீஹார் மாநிலம் பாட்னா போலீசில் புகார் மனு கொடுத்தார். இதையடுத்து போலீசார் ரியா சக்கரபர்த்தி உள்ளிட்ட 5 பேர் மீது தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.