ரேஷன் கடைகளில் இலவசப் பொருட்கள் இனி இருக்காது – அரசு அறிவிப்பு

ஆகஸ்ட் மாதத்துக்கான ரேசன் பொருட்கள் பெற 1, 3 மற்றும் 4ம் தேதிகளில் டோக்கன் விநியோகம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு தெரிவித்து உள்ளதாவது: ஆகஸ்ட் மாத ரேசன் பொருட்களுக்கு 1, 3, 4 தேதிகளில் டோக்கன் விநியோகம் செய்யப்படும். ஆகஸ்ட் மாத ரேசன் பொருட்களுக்கு இந்த தேதிகளில் வீடு தேடி சென்று ஊழியர்கள் டோக்கன் தர வேண்டும்.

நாள்தோறும் 225 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் பொருட்களை வழங்க ரேசன் ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. டோக்கனில் குறிப்பிடாத நேரத்தில் பொருள் வழங்கப்பட மாட்டாது என ஊழியர்கள் தெரிவிக்க வேண்டும்.

ஆகஸ்ட் 5ந்தேதி முதல் ரேசன் அட்டைதாரர்களுக்கு பொருட்களை முறையாக விநியோகம் செய்ய வேண்டும். ரேசன் கடைகளுக்கு 7ந்தேதிக்கு பதில் மாற்று நாளில் பின்னர் விடுமுறை அறிவிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், ரேஷன் கடைகளில் இனி இலவசப் பொருட்கள் கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 4 மாதங்களாக பொருட்கள் இலவசமாக தரப்பட்ட நிலையில் இப்போது அப்படி பொருட்கள் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x