விவசாயி அணைக்கரை முத்து உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவு!

வனத்துறை காவலில் இருந்த அணைக்கரை விவசாயி முத்து மர்மமான முறையில் இறந்த நிலையில், அவரது உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே ஆழ்வார்குறிச்சி வாகைகுளத்தை சேர்ந்தவர் அணைக்கரை முத்து (72), விவசாயியான இவரை வயலில் மின்வேலி அமைத்தது தொடர்பாக கடையம் வனத்துறையினர் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அங்கு அவரை வனத்துறை காவலர்கள் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மூர்ச்சையான முத்து தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 5 நாட்களாக போராட்டம் நடத்தினர். இவ்விஷயம் தமிழக அளவில் சர்ச்சையானது. சாத்தான்குளத்தில் காவலர்களால் தந்தை – மகன் கொல்லப்பட்டு ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் அடுத்த லாக்கப் மரணமா என சமூக ஊடகங்களில் மக்கள் கொந்தளித்தனர். விஷயத்தை பெரிதுப்படுத்தாமல் இருக்க முத்துவின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவியாக சில லட்சங்களை முதல்வர் அறிவித்தார். அதனை ஏற்க மறுத்த முத்துவின் மகள், உரிய நீதி கிடைக்கும் வரை ஓய மாட்டேன் என்றார். ஆனாலும் வனத்துறையினர் மீது வழக்கு பதியவில்லை.

இதற்கிடையே, அணைகரை முத்துவின் உடல் நெல்லை அரசு  மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவர் உடலில் 4 இடங்களில் காயங்கள் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. இவ்வறிக்கையை ஏற்க மறுத்த முத்துவின் குடும்பத்தினர், அவர் உடலில் 18 இடங்களில் காயங்கள் இருந்ததாகவும் மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், நெல்லை தூத்துக்குடி அரசு மருத்துவமனையின் மூத்த மருத்துவர்கள் 3 பேர் தலைமையில் மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.  

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x