சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சா.கந்தசாமி காலமானார்!

உடல் நிலை கோளாறால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சா.கந்தசாமி காலமானார். அவருக்கு வயது 81.
நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் பிறந்த இவர் 1968ல் எழுதிய சாயாவனம் என்ற நாவல் மூலம் தமிழக இலக்கிய உலகிற்கு அறிமுகமானார். 1998-ல் விசாரணை கமிஷன் என்ற நாவலுக்காக, கந்தசாமிக்கு சாகித்ய அகாடமி வருது வழங்கப்பட்டது. இது தவிர ஏராளமான சிறுகதைகள் எழுதியுள்ளார்.
இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலம் சரியில்லாமல் இருந்தது. இதனால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் வெள்ளியன்று காலை 7 மணியளவில் அவர் உயிர் இழந்தார்.