சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு எம்ஜிஆர், ஜெ., பெயர்

சென்னையில் உள்ள மூன்று மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு முன்னாள் முதல்வர்களான அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா பெயர்களை சூட்டியுள்ளார் முதல்வர் பழனிசாமி.

சென்னையில் 2015-ம் ஆண்டு மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. தற்போது ஏர்போர்ட் – வண்ணாரபேட்டை, அண்ணாநகர் – செயின்ட் தாமஸ் மவுன்ட் ஆகிய இரு வழித்தடங்களில் மெட்ரோ இயக்கப்படுகிறது. ஊரடங்கு காரணமாக தற்போது மெட்ரோ சேவை தொடங்கப்படாமல் இருக்கிறது.

இந்த நிலையில் முதல்வர் பழனிசாமி மூன்று மெட்ரோ ரயில் நிலையங்களின் பெயர்களை மாற்றி முன்னாள் முதல்வர்கள் பெயர்களை சூட்டியுள்ளார். அதன்படி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு ‘புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம்’ என பெயர் வைத்ததைப் போல சென்ட்ரல் மெட்ரோ என்பது ‘புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ’ என்றும், ஆலந்தூர் மெட்ரோவுக்கு அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ என்றும், அதேபோல், கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய மெட்ரோவுக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா பெயரும் சூட்டப்பட்டுள்ளது. 

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x