இந்த கொரோனா நிலைமையில் பூமி பூஜை தேவையா? – ராஜ் தாக்கரே அதிரடி

வலதுசாரி கொள்கை கொண்ட மஹாராஷ்டிரா நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, இந்த கொரோனா சூழலில் ராமர் பூமி பூஜையை மக்கள் ரசிக்க மாட்டார்கள் என கூறியுள்ளார்.
மராத்தி சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த ராஜ் தாக்கரே கூறியதாவது: மக்கள் வேறுபட்ட மனநிலையில் இருக்கும் இந்த நேரத்தில் பூமி பூஜை தேவையில்லை. இரண்டு மாதங்களுக்குப் பிறகு நிலைமை சீரானதும் இது நடந்திருக்கலாம். மக்கள் விழாவை ரசித்திருப்பார்கள்.
கொரோனா நிலைமையை மஹாராஷ்டிரா அரசு தவறாக கையாள்கிறது. மக்களை அச்சத்திலிருந்து விடுவிக்க வேண்டியது முக்கியம். மாநில அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள், தொலைக்காட்சி சேனல்களில் வரும் செய்திகள் மற்றும் வாட்ஸ்அப்பில் வரும் செய்திகள் அனைத்தும் ஒரு வகையான குழப்பத்திற்கு வழிவகுக்கின்றது.
முதல்வராக உத்தவ் தாக்கரே டிவியில் மட்டுமே செயல்படுகிறார். அவரது பணியை கடந்த ஐந்து மாதங்களில் என்னால் பார்க்க முடியவில்லை. அவர் பரிந்துரைக்கும் இ-பூமி பூஜை விழாவையும் ஏற்றுக்கொள்ள முடியாது. பூமி பூஜையை கோலாகலமாக நடத்த வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.