தமிழகத்தில் நடைபெறும் தேர்தலில் ஏஐஎம்ஐஎம் கட்சி போட்டியிடும் – ஓவைஸி தெரிவிப்பு

தமிழக தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், முஸ்லீம்களின் வாக்குகளை பெற்று தமிழகத்திலும் கால் ஊன்ற ஏஐஎம்ஐஎம் கட்சி தீர்மானித்துள்ளது.
இதுகுறித்து கட்சியின் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான ஓவைஸி நேற்று ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஏஐஎம்ஐஎம் கட்சி குஜராத்தில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் சில பஞ்சாயத்துகளில் வெற்றி பெற்றது. இன்று (நேற்று) நான் ராஜஸ்தான் செல்கிறேன். அங்கு கட்சி பணிகளை பலப்படுத்த உள்ளேன். விரைவில் தமிழகத்தில் நடைபெறும் தேர்தலில் எங்களது கட்சி போட்டியிடும். இதேபோன்று, மேற்கு வங்க தேர்தலிலும் காங்கிரஸுடன் கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசித்து முடிவு அறிவிக்கப்படும்.
இவ்வாறு ஓவைஸி கூறினார்.