மழையால் நீர்வரத்து அதிகரித்தது – முல்லை பெரியாறு அணை!!!

முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் கன மழை தொடர்வதால், நீர்வரத்து, விநாடிக்கு 1032 கன அடியாக அதிகரித்து வருகிறது.
முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் கடந்த சில நாட்களாக சாரல் மற்றும் கன மழை பெய்து வருகிறது. பல மாதங்களாக 112 அடி உயரமாக இருந்த நீர்மட்டம் சாரல் மழையால் ஜூலை, 11ல் 113 அடி உயரமாகவும், ஜூலை, 22ல் 114 அடி உயரமாகவும், ஜூலை. 31 ல் 115 அடி உயரத்தையும் எட்டியது.ஜூலை மாதத்தில் மட்டும் 3 அடி உயரத்தை எட்டியது.
இதனால் பல மாதங்களாக நீர் மட்டம் உயராமல் கவலையில் இருந்த பெரியாறு அணைப்பகுதி பொறியாளர்கள், மற்றும் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் மகிழ்ச்சியடந்தனர். இதற்கிடையில் ஞாயிற்றுக் கிழமை அணைக்குள் நீர்வரத்து விநாடிக்கு 604 கன அடியாக இருந்தது. ஒரே நாளில் 428 கன அடி தண்ணீர் அதிகரித்து, திங்கள் கிழமை 1032 கன அடியாக வந்தது.

இதனால் நீர் மட்டம் 115.40 அடியாக இருந்தது. திங்கள் கிழமை 115.75 அடியாக உயர்ந்தது. பெரியாறு அணைப்பகுதியில், 31.4 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரியில் 22.6 மி.மீ., மழையும் பெய்தது.இதே நிலை நீடித்தால், திங்கள்கிழமை இரவுக்குள் 116 அடி உயரத்தை எட்டும் என்று அணைப்பகுதி பொறியாளர் ஒருவர் தெரிவித்தார்.