பாபநாசம், சேர்வலாறு அணைகளில் தண்ணீர் திறக்க உத்தரவு முதல்வர் அறிவிப்பு

நெல்லையில் பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.இதுதொடர்பாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கையில்
பாபநாசம், சேர்வலாறு அணைகள்
திருநெல்வேலி மாவட்டத்தின் தாமிரபரணி பாசனபரப்பில் அமைந்துள்ள கோடைமேலழகியான், நதியுண்ணி மற்றும் கன்னடியன் அணைக்கட்டுகளின் மூலம் பாசன வசதி பெறும் கால்வாய் பகுதிகளில் ஆங்காங்கே உள்ள பயிர்களை காக்கவும், பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைகளுக்காகவும் பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளிலிருந்து தண்ணீர் திறக்க விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று சிறப்பு நிகழ்வாக 5.8.2020 முதல் 14.8.2020 முடிய 10 நாட்களுக்கு 691.20 மி.க.அடிக்கு மிகாமல் தண்ணீரை திறந்துவிட நான் உதவிட்டுள்ளேன்.
இதனால் திருநெல்வேலியிலுள்ள கிராமங்களில் பாசனம், கால்நடை மற்றும் பொது மக்களின் குடிநீர் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். என அவர் தெரிவித்துள்ளார்.