3வது ஒருநாள் போட்டியில் வெறித்தனமாக விரட்டி வெற்றி பெற்ற ஐயர்லாந்து…

அயர்லாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற 3வது கடைசி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து எடுத்த 328 ரன்கள் இலக்கை அயர்லாந்து வெறித்தனமாக விரட்டி 329/3 என்று 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிர்ச்சியளித்தது. இதன் மூலம் தொடர் 2-1 என்று முடிந்தது.

329 ரன்கள் இலக்கை அயர்லாந்து விரட்டும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள், ஏனெனில் கடந்த 2 போட்டிகளில் அடைந்த தோல்வி அப்படி.

ஸ்விங் மருந்துக்குக் கூட இல்லாததால் டி.ஜே.வில்லே புரட்டி எடுக்கப்பட்டார், அவர் 1 விக்கெட்டுக்கு 70 ரன்கள் கொடுத்தார். டெலானியை இவர் வீழ்த்திய பிறகு ஸ்டர்லிங்குடன் கேப்டன் பால்பர்னி இணைந்தார்.

இருவரும் இங்கிலாந்துக்கு இனி விக்கெட் இல்லை என்ற ரீதியில் ஆடினர். பால் ஸ்டர்லிங் 6 முறை ஸ்டாண்ட்ஸுக்கு சிக்சர் அடித்தார், 9 பவுண்டரிகளை விளாச கேப்டன் பால்பர்னி கொஞ்சம் நிதானத்துடன் ஆடினாலும் உறுதியுடன் ஆடினார். இவர் 12 பவுண்டரிகளை அடித்தார்.

42வது ஓவரில் 214 ரன்கள் கூட்டணிக்குப் பிறகு 128 பந்துகளில் 142 ரன்கள் வெளுத்த பால் ஸ்டர்லிங் ரன் அவுட் ஆனார். அந்த விக்கெட்டுக்குப் பிறகு 8 ஓவர்களில் அயர்லாந்துகு 63 ரன்கள் தேவைப்பட்டது. ஆதில் ரஷீத் சத நாயகன் பால்பர்னியை வீழ்த்தினார். கடைசி 5 ஒவர்களில் 44 ரன்கள் தேவைப்பட்டது.

அப்போது ஹாரி டெக்டர், கெவினோ பிரையன் இணைந்து அயர்லாந்தை வெற்றி பெறச் செய்தனர். 9 ஆண்டுகளுக்கு முன்பு உலகக்கோப்பையில் இங்கிலாந்து அதிர்ச்சியளித்த அயர்லாந்து அதே இலக்கில் மீண்டும் வென்றது குறிப்பிடத்தக்கது.

ஆட்ட நாயகனாக அயர்லாந்தின் பால் ஸ்டர்லிங்கும், தொடர் நாயகனாக டேவிட் வில்லேயும் தேர்வு செய்யப்பட்டனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x