திருவாடானை MLA கருணாஸ்க்கு கொரோனா தொற்று உறுதி!!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிதீவிரமாக பரவி வருகிறது கொரோனா வைரஸ் பொதுமக்கள் மட்டுமின்றி கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள், மருத்துவர்கள், போலீசார், துப்புரவு பணியாளர்கள், செய்தியாளர்கள் தீயணைப்புத்துறையினர் என அனைவரும் கொரோனா நோய் தாக்கிவருகிறது.
இந்தநிலையில் திண்டுக்கல்லில் தங்கியுள்ள திருவாடானை தொகுதி எம்எல்ஏ மற்றும் திரைப்பட நடிகரான கருணாசுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவரது பாதுகாவலருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் தற்போது கருணாசுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று உறுதியானதையடுத்து தற்போது கருணாஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.