அதிமுக முன்னாள் துணைத் தலைவர் வெட்டிக் கொலை!! கிழக்குக் கடற்கரைச் சாலையில் சாலை மறியல்..

மதுராந்தகம் அருகே பேரூராட்சி அதிமுக முன்னாள் துணைத் தலைவர் ராமச்சந்திரன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆம்புலன்சில் வந்த பேரூராட்சி துணைத் தலைவர் ராமச்சந்திரன் உடலை வாங்க மறுத்து அவர்களது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் இல்லை FIR-ரில் பெயர் பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி சுமார் 500க்கும் மேற்பட்டோர் கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் ஒரு மணி நேரமாக சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
முக்கிய குற்றவாளி கைது செய்யப்படும் வரை இந்த மறியல் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர். கிழக்குக் கடற்கரைச் சாலையில் நடைபெற்ற சாலை மறியலால் போக்குவரத்து முடங்கியது. சென்னை பாண்டிச்சேரி ஆகிய பகுதியில் வரும் வாகனங்களை காவல்துறையினர் மாற்றுப்பாதையில் அனுப்பி வைத்தனர்.