தென்மாவட்டங்களில் இன்று சுற்றுப்பயணம் செய்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாக நிலவி வரும் நிலையில், அதன் தடுப்புப் பணிகள் பற்றி ஆய்வு செய்வதற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் பங்கேற்று கொரோனா தடுப்புப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதுடன் பல்வேறு அரசு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.
அதன்பின் மதுரைக்கு செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு நடத்த உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு விவசாயிகள், சிறு, குறு, நடுத்தர தொழில் பிரதிநிதிகளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேச உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
திருநெல்வேலியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாலத்தை திறந்து வைக்க உள்ளார், தொடர்ந்து தென்காசி மாவட்டங்களிலும் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்தும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.