ஆரம்ப கட்ட கொரோனா நோயாளிகளுக்கு மருந்து ரெடி…
![](https://thambattam.com/storage/2020/08/newpills_3320292b.jpg)
இந்தியாவில் கொரோனா நோயால் பாதிக்க பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை நெருங்கி கொண்டு இருக்கிறது இதுவரை இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க படவில்லை அனைத்து நாடுகளும் மருந்து கண்டுபிடிக்க முழு முனைப்பு காட்டி வருகின்றன ரஷ்யா போன்ற நாடுகள் அதன் ஆராய்ச்சியில் மூன்றாம் கட்டத்தை எட்டிவிட்டன. அதேபோல் பிற நோய்களுக்கான மாத்திரை, ஊசி மருந்துகளை அவசர தேவைக்கு ஏற்ப சோதனை அடிப்படையில் பயன்படுத்த இந்தியாவில் அனுமதி அளிக்கப்படுகிறது.
அந்த வகையில் ஜப்பானில் ஃப்ளு காய்ச்சளுக்கு வாய்வழி வைரஸ் தடுப்பு மருந்தாக பயன்படுத்தப்படும் பேவிபிராவிர் எனும் மாத்திரை தரப்படுகிறது. இது வைரஸ் நகலெடுப்பை தடுக்கிற ஆர்.என்.ஏ. பாலிமரேசை தேர்ந்தெடுப்பதை தடுத்து நிறுத்தும்.
இந்த மருந்தை கொரோனா வைரஸ் தொற்று லேசான மற்றும் மிதமான பாதிப்பில் உள்ளவர்களுக்கு தர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிற பன்னாட்டு மருந்து நிறுவனம் லூபின் என்ற நிறுவனம், பேவிபிராவிர் மாத்திரையை கோவிஹால்ட் என்ற பெயரில் இந்தியாவில் வினியோகிக்க லூபின் நிறுவனத்துக்கு அனுமதி அளித்துள்ளது. இந்த மாத்திரையின் விலை ஒன்று ரூ.49 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த மாத்திரை 200 மில்லிகிராம் அளவில் 10 மாத்திரைகள் கொண்ட அட்டையாக கிடைக்கிறது.