காஷ்மீரில் மீண்டும் தாக்குதல் பா. ஜ. க துணை தலைவர் உயிரழப்பு…

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த  ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் ரத்து செய்யப்பட்டது.

அந்தமாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்தது.  சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு நேற்றோடு ஒரு ஆண்டு நிறைவு பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக , அங்கு  அசம்பாவித சம்பவங்களை பயங்கரவாதிகளால் நிகழ்த்தபட க்கூடும் என்பதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது . இந்நிலையில்,  குல்காம் மாவட்ட பகுதியில் பாஜக துணை செயலாளராக இருப்பவர் சஜாத் அகமது அவர் மீது இன்று பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.  வீட்டின் முன் நின்று கொண்டிருந்த போது, சஜாத் அகமது மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

படுகாயம் அடைந்த சஜாத் அகமது அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  ஆனால் அவர் சிகிச்சை பலனளிக்காமல்  பரிதாபமாக உயிரிழந்தார்.  கடந்த சில வாரங்களில் பாஜக தலைவர்களை குறிவைத்து நடத்தப்படும் 4-வது தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x