பிரதமர் மோடி இன்று முக்கிய உரை…
புதிய தேசிய கல்வி கொள்கை(NEP) பற்றிய கருத்தரங்கு இன்று தலைநகர் டெல்லியில் நடைபெறுகிறது. “புதிய கல்வி கொள்கையின் கீழ் உயர் கல்வியில் புதிய சீர்திருத்தங்கள்” எனும் தலைப்பில் இந்த கருத்தரங்கு நடக்கிறது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் பல்கலைக்கழக மானியக்குழுவும் இணைத்து இந்த மாநாட்டை நடத்துகின்றன.
இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, கருத்தரங்கில் தொடக்க உரை ஆற்றுகிறார். புதிய கல்வி கொள்கையின்(NEP) பல்வேறு அம்சங்கள் குறித்து தனித்தனி அமர்வுகள் இதில் விவாதிக்கப்படுகிறது.
இந்த கருத்தரங்கில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்,மத்திய இணை மந்திரி சஞ்சய் தோட்ரே, புதிய கல்வி கொள்கை வரைவு குழுவின் தலைவர், உறுப்பினர்கள், பல்வேறு பல்கலைக்கழக துணை வேந்தர்கள், மேலும் பல்வேறு கல்லூரி முதல்வர்களும், விஞ்ஞானிகளும் கலந்துகொள்கிறார்கள்.