நாங்களும் தடுப்பூசி தயாரிக்கிறோம் அறிவித்த இஸ்ரேல்?

உலக அளவில் கொரோனா நோயின் பரவல் 2 கோடியை நெருங்கப்போகிறது. இதற்கு இன்னும் தடுப்பூசி கண்டு பிடிக்க படவில்லை அனைத்து நாடுகளும் தடுப்பூசி கண்டுபிடிக்க தீவிரம் காட்டி வருகின்றன ரஷ்யா மூன்றாம் கட்டத்தையும் இந்தியா முதல் கட்டத்தையும் தாண்டிவிட்டன.
இந்த நிலையில் நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என இஸ்ரேலும் தடுப்பூசி தயாரிப்பில் குறிப்பிட்ட தக்க முன்னேற்றம் பெற்றுள்ளது . இஸ்ரேலில் தடுப்பூசி உருவாக்கும் திட்ட நிலவரத்தின் முன்னேற்றம் குறித்து கேட்டு அறிவதற்காக ராணுவ மந்திரி பென்னி காண்ட்ஸ், அங்கு தனது அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ‘IIBR’ என அழைக்கப்படுகிற இஸ்ரேல் உயிரியல் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு நேற்று ஆய்வு செய்தார் பின்பு, அதன் இயக்குனர் பேராசிரியர் ஷபிராவை அவர் சந்தித்து பேசினார்.
அதைத் தொடர்ந்து பேராசிரியர் ஷபிரா ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர், “கொரோனாவுக்கு ஒரு சிறந்த தடுப்பூசி தங்களிடம் கைவசம் உள்ளது என்றும். குறிப்பிட்ட கால அட்டவணையின் அடிப்படையில் தடுப்பூசி கடந்து செல்ல வேண்டிய ஒழுங்குமுறை செயல்முறைகள் உள்ளன என்றும், இலையுதிர் கால விடுமுறைக்கு பின்னர் நாங்கள் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் சோதனைகளை தொடங்குவோம்” என கூறி இருக்கிறார்.
இதனிடையே ராணுவ மந்திரி பென்னி காண்ட்ஸ் கூறும்போது, “ இஸ்ரேலில் IIBR. உருவாக்கியுள்ள தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் சோதனை, விரைவில் தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.