ரூ. 5 ஆயிரம் நிதியுதவி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு…
![](https://thambattam.com/storage/2020/08/eps.jpg)
கொரோனா வைரஸ் பரவல் சென்னையில் சற்று தனிந்துள்ள நிலையில் மற்ற மாவட்டங்களில் தொற்றின் பரவல் அதிகமாக இருக்கிறது, இதனால் கொரோனா நோய் பரவல் தொற்றைக்கட்டுப்படுத்தும் வகையில்
தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்து இன்று ஆய்வு செய்து வருகிறார்.
முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில், 275 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கி வைத்த முதல்வர் மேலும் சில புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.
மேலும் விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பேசினார் அதில்:
தென்காசி மாவட்டத்தில் ஏராளமான தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூரில் தொழிற்பேட்டை அமைக்கப்படும்என்றும் கூறினார்.
கொரோனா தடுப்பு பணியிலுள்ள 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என்று கூறிய முதல்வர் .அவசர கால மருத்துவ பணியாளர்களுக்கும் தலா ரூ.5 ஆயிரம் நிதி வழங்கப்படும் என்றும் கூறினார்.