அம்மோனியம் நைட்ரேட் விவகாரம் கையில் எடுத்த மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்…
லெபனானில் உள்ள துறைமுகத்தில் கடந்த சிலநாட்களுக்கு முன்பு சுமார் 2450 மெட்ரிக் டன் அமோனியம் வெடித்து சிதறியது இந்த கோர விபத்தில் நூற்றுக்கும் அதிகமானோர் பரிதாபமாக பலியாகினர் 6 ஆண்டுகளாக துறைமுகத்தில் இருந்த அம்மோனியம் நைட்ரேட் திடீரென வெடித்ததுதான் காரணம் என கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வெடிவிபத்தின் வீடியோ வெளியாகி உலகம் முழுவதும் மிகுந்த பரபரப்புடன் பேசப்பட்டது. இந்நிலையில் இதே போல் சென்னை துறைமுகத்திலும் அமோனியம் நைட்ரேட்டை கண்டைனரில் வைத்துள்ளதாக தகவல் கிடைத்தது, அதை அகற்ற வேண்டும் என பல்வேறு கட்சி தலைவர்களும் அறிக்கை விட்டிருந்தனர்.
தற்போது சென்னை மணலி கிடங்கில் உள்ள 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்டை 3 நாளில் அகற்ற சுங்கத்துறை ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
குடியிருப்புகளுக்கு அருகாமையில் அபாயகரமான வெடிபொருட்கள் இருப்பதால் உடனடியாக அகற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது .கிடங்கை சுற்றி 2 கி.மீ. சுற்றளவில் வீடுகள் இல்லை என ஏற்கனவே சுங்கத்துறை கூறியிருந்தது,ஆனால் அது முற்றிலும் தவறான தகவல் என்பதும் நிரூபணமாகி உள்ளது.இதனிடையே மாசுக்கட்டுப்பாட்டு வாரிய ஆய்வில் அங்கு மொத்தம் 12,000 குடியிருப்புகள் இருப்பது தெரியவந்துள்ளது.