நீலகிரி மக்களே, அடுத்த 24 மணிநேரத்திற்கு உஷாரா இருங்கோ!! கனமழை பெய்யும்னு வானிலை மையம் அறிவிச்சிருக்கு!

நீலகிரி மாவட்டத்தில், கடந்த 24 மணிநேரத்தில், அதிகபட்சமாக தேவாலாவில் 34 சென்டி மீட்டர் மழையும், பந்தலூரில் 19 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இந்நிலையில், அடுத்த 24 மணிநேரத்தில், நீலகிரியில் அதி கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவை, தேனி மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், வேலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.