இந்தியாவை அடுத்து அமெரிக்காவிலும் மண்ணைக் கவ்வும் சீன ஆப்!!
![](https://thambattam.com/storage/2020/08/US-china6_1.jpg)
உலகம் முழுக்க வரவேற்பை பெற்ற சீனா உருவாக்கிய டிக்டாக் ஆப் மூலம் பலரும் தங்களை நடிகர்களாகவே நினைத்து பாடல்களுக்கு நடனம் ஆடுவதும், தனக்குப் பிடித்த நடிகரின் வசனத்தைப் பேசி நடிப்பதும் என மினி ஸ்டாராகவே டிக்டாக் அவர்களை மாற்றியது.
மினி ஸ்டார் மட்டுமல்ல, மில்லியன் கணக்கில் ஃபாலோயர்ஸ் பெற்று பலர் டிக்டாக் புகழில் தொலைக்காட்சிகள், யூடியூப் சேனல்கள், ஏன் சினிமாவில் கூட நடிக்கும் வாய்ப்பு ஏராளமானவர்களுக்குக் கிடைத்தது.
இவ்வளவு புகழ் பெற்றது எனக் கூறப்பட்டாலும் அந்த ஆப் பாதுகாப்பானது அல்ல என்று சொல்லப்பட்டது. காரணம், அதைப் பயன்படுத்துபவர்களின் விவரங்களைத் திருடுவதாக அதன்மீது புகார் கூறப்பட்டது.
![](https://thambattam.com/storage/2020/08/indian-ban-chian-apps-tiktok-wechat-june-30-2020-300x169.jpg)
சீனா – இந்தியா எல்லை மோதலை அடுத்து பல்வேறு காரணங்களால் இந்தியாவில் டிக்டாக் ஆப் தடை செய்யப்பட்டது. தற்போது அது அமெரிக்காவிலும் தடை செய்யப்படவிருக்கிறது.
டிக்டாக் மற்று வீ சாட் ஆப்கள் பயனாளர்களின் விவரங்களைத் திருடி சீனாவின் உள்ள நிறுவனத்திற்கு அளிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது. இதனால் அமெரிக்காவின் பாதுகாப்புக்கும், பொருளாதாரத்துக்கும் ஆபத்து விளையலாம் என கருதும் அமெரிக்கா பல்வேறு காரணங்களைக் கூறி இன்னும் 45 நாள்கள் கழித்து வீ சாட் மற்றும் டிக்டாக் இரண்டும் அமெரிக்காவில் தடை செய்யப்பட விருப்பதாகக் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.