களத்திற்கு திரும்ப தயாராகும் தோணி!!! ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்!!!
நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு இந்தாண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் அரபு எமிரகத்தில் நடக்கும் என முடிவு செய்யப்பட்டது.
இந்தப் போட்டிகள் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கி 53 நாட்களுக்கு நடக்கும். துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜாவில் உள்ள சர்வதேச மைதானங்களில் போட்டிகள் நடைபெறும். ஐபிஎல் இறுதிப் போட்டி நவம்பர் 10 ஆம் தேதி நடக்கும் என திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 அரையிறுதியில் நியூசிலாந்திற்கு எதிரான போட்டியின் இந்தியா தோல்வியடைந்ததிலிருந்து கிரிக்கெட் மைதானத்திலிருந்து ஒதுங்கியிருக்கும் எம்.எஸ் தோனி – இந்தஐபிஎல்-லில் தான் கிரிக்கெட் மைதானத்திற்குத் திரும்பவுள்ளார்.
39 வயதான விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் தோணி தனது சொந்த ஊரான ராஞ்சியில் பயிற்சியை மீண்டும் தொடங்கி, JSCA சர்வதேச ஸ்டேடியம் வளாகத்தில் நெட் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து ஒரு JSCA அதிகாரி ஒருவர்”அவர் கடந்த வாரம் JSCA சர்வதேச ஸ்டேடியம் வளாகத்திற்கு வந்தார். அவர் ஒரு பந்துவீச்சு இயந்திரத்தைப் பயன்படுத்தி பயிற்சியில் ஈடுபட்டார். வார இறுதியில் இரண்டு நாட்கள் பேட்டிங் பயிற்சி செய்தார்.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் “அனைத்து ஊடகங்கள் மற்றும் ரசிகர்களின் பார்வை எப்போதும், அவர் மேலே இருப்பதால், தோனியின் அனைத்து நடவடிக்கைகளிலும் ரகசியம் காக்கப்படுகின்றது. ஆகையால் அவரது முழு பயிற்சிக்கான அட்டவணையைப் அற்றி அதிகம் தெரியவில்லை. அவருடைய திட்டங்கள் என்ன அல்லது அவர் பயிற்சிக்காக மீண்டும் திரும்பி வருவாரா என்பது எனக்குத் தெரியாது. பயிற்சிக்கான வசதியை அவர் பார்வையிட்டார் என்பது எங்களுக்குத் தெரியும்” என்று அந்த அதிகாரி கூறினார்.
இதற்கிடையில் தோணி பைக்கில் ராஞ்சியில் உள்ள ஒரு பண்ணை இல்லத்திற்குள் தனது கிரிக்கெட் கிட்டுகள் வைத்திருக்கக்கூடிய ஒரு பையுடன் நுழையும் வீடியோ இன்ஸ்டாகிராமில் தற்போது வைரலாகி வருகிறது.