சென்னை தியாகராயர் நகரில் உள்ள நகைக்கடையில் ரூ.2 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை !!

சென்னை தியாகராயர் நகரில் நகைக்கடையில் ரூ.2 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

தியாகராய நகர் பகுதியில் மூசாதெருவில் தனியார் நகைக்கடை ஒன்று 15 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இது மொத்த வியாபாரம் செய்யக்கூடிய ஒரு நகைக்கடை. நகை பட்டரையும் வைத்து தொழில் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் ரூபாய் 2 கோடி மதிப்புள்ள தங்கம், வைர நகைகளைக் கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். நகைக்கடையின் கிரில் கேட்டின் பூட்டை உடைத்து 4.125 கிலோ தங்க நகைகள், 15 தங்க நகைக்கட்டி, 15 வெள்ளிக்கட்டி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நகைக்கடை உரிமையாளர்கள் மூன்று பேர் மாம்பழம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்கள். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

அதேபோல நகைக்கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x