நடிகர் விஜய்க்கு நடிகர் மகேஷ்பாபு சவால்

பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் மகேஷ்பாபு, மரக்கன்றுகள் நடும்படி நடிகர் விஜய்க்கு சவால் விடுத்துள்ளார்.
தெலுங்கு திரைப்பட நடிகர் மகேஷ்பாபு, நேற்று தனது 45 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி ஐதராபாத்தில் உள்ள தனது வீட்டில் மரக்கன்று ஒன்றை அவர் நட்டார்.

இதை ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் மகேஷ் பாபு, மரக்கன்றுகளை நடும் படி, நடிகர்கள் விஜய், ஜூனியர் என்.டி.ஆர்., மற்றும் நடிகை ஸ்ருதிஹாசன் ஆகியோருக்கு சவால் விடுத்துள்ளார். இந்த சவாலை நடிகர் விஜய் ஏற்பாரா என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.