இந்திய அணி வீரர் தோனிக்கு புகழாரம் சூட்டியுள்ள உலகின் தலைசிறந்த நடுவர் சைமன் டாஃபல்!!
![](https://thambattam.com/storage/2020/08/0gy2hLQQ1R-780x470.jpg)
கடந்த 2012ல் நடந்து 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியோடு ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த ஓய்வுபெற்ற, உலகின் சிறந்த முன்னாள் நடுவரான சைமன் டாஃபல், தான் கண்ட சிறந்த மூன்று கிரிக்கெட் வீரர்களின் பட்டியலை குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில், அவர் அளித்துள்ள நேர்காணலில் இதை குறிப்பிட்டுள்ள சைனம் டாஃபல், “இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, டேரன் லீ மேன், ஷேன் வார்ன் ஆகிய மூவரும் மிகவும் புத்திசாலியானவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
![](https://thambattam.com/storage/2020/08/Simon-Taufel-300x218.jpg)
அதிலும், இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன் தோனியை குறித்து அவர், “தோனி நான் கண்டதில் மிகச்சிறந்த கிரிக்கெட் மூளை படைத்தவர். ஷேன் வார்ன், டேரன் லீ மேன் ஆகிய மூவரும் நான் கண்ட டாப் 3 கிரிக்கெட் மூளை கொண்டவர்கள். இதில் தோனியின் நகைச்சுவை உணர்வு, அமைதியும் அபாரமானது., அவரது நகைச்சுவை உணர்வு நிறைய பேர் அறியாதது.” என்று கூறியுள்ளார்.