பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் – சட்டீஸ்கர் மாநில முதல்வர் வலியுறுத்தல்

பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டுமென, சட்டீஸ்கர் மாநில முதலமைச்சர் திரு.பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார்.
வேளாண் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக, பெட்ரோல், டீசல் மீது செஸ் வரி விதிக்கப்படுவதாக, மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதனால், பெட்ரோல் விலை 90 ரூபாயை நெருங்கியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சட்டீஸ்கர் முதலமைச்சர் திரு.பூபேஷ் பாகல், பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்பட்ட செஸ் வரியை, மத்திய அரசு திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். இது சாதாரண மக்களுக்கு சுமையை ஏற்படுத்துவதோடு, பண வீக்கத்திற்கும் காரணமாக அமையும் என, திரு.பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார்.