பாஜகவினர் கையிலெடுத்த “திடீர் முருகன்” வழிபாடு; கேள்விகளால் வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!!

கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக தமிழகத்தில் கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்தும், இந்து கடவுள் முருகன் குறித்து அவதூறு பரப்பும் வகையில் வீடியோ வெளியிட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைக் கண்டித்து இந்து அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் அந்த சேனலை சேர்ந்த சுரேந்திரன், செந்தில் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று தமிழக பாஜக தலைவர்கள், பிரபலங்கள் தங்கள் வீடுகளில் முருகன் படத்தை வைத்து வழிபடுவது போல புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
