“இது இந்தியாவா? இல்லை “இந்தி”- யாவா?”திமுக தலைவர் முக.ஸ்டாலின் ஆவேசம்!
![](https://thambattam.com/storage/2020/08/MK-stalin_20200312-780x470.jpg)
திமுக எம்.பி. கனிமொழியிடம் சென்னை விமான நிலையத்தில், தனக்கு இந்தி தெரியாது என்பதால் சி.ஐ.எஸ்.எஃப் படை அதிகாரியிடம் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசுமாரு கேட்டதற்கு, அவர் “நீங்கள் ஒரு இந்தியரா” என்று கேட்டார். பதிலுக்கு கனிமொழி எம்.பி., “இந்தி தெரிந்திருந்திருப்பது என்பது இந்தியன் என்பதற்கு சமமா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
![](https://thambattam.com/storage/2020/08/kanimozhi-300x150.jpg)
இந்த டுவிட்டர் பதிவு, தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
![](https://thambattam.com/storage/2020/08/dsfsd-300x226.jpg)
இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, இந்தி தெரியாது என்று சொன்னதால், ‘நீங்கள் இந்தியரா?’ என்று விமானநிலைய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் திமுக எம்.பி. கனிமொழியை பார்த்துக் கேட்டுள்ளார். இந்திதான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா? இது இந்தியாவா? “இந்தி”-யாவா? பன்முகத் தன்மைக்கு புதைகுழி தோண்டுகிறவர்களே அதில் புதையுண்டு போவார்கள்! என்று ஆவேசமாக குறிப்பிட்டுள்ளார்.
கனிமொழி விவகாரம் தொடர்பாக திருச்சி தொகுதி மக்களவை உறுப்பினரான திருநாவுக்கரசரும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதுபற்றி டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் நடத்தையையும் அணுகுமுறையையும் கண்டிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.