வெள்ளை மாளிகையில் துப்பாக்கிச் சூடு! அமெரிக்க அதிபரை கொல்ல சதியா? என அதிகாரிகள் விசாரணை!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது வெள்ளை மாளிக்கைக்கு வெளியே ஒருவர் பாதுகாப்பு அதிகாரிகளால் சுடப்பட்டார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது டிரம்பின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் அவரின் அருகில் சென்று காதுக்குள் முணுமுணுக்க, “என்ன நடக்கிறது” என்று கேட்ட டிரம்ப், பின் செய்தி அறையைலிருந்து சென்றார்.
அதன்பின் ஒன்பது நிமிடங்கள் கழித்து திரும்பிவந்த டிரம்ப் பத்திரிகையாளர்களிடம், “வெள்ளை மாளிக்கைக்கு அருகில் ஆயுதம் வைத்திருந்த நபர் ஒருவர் அமெரிக்க பாதுகாப்பு சேவையால் சுடப்பட்டார் என்று தெரிகிறது” என்றார்.
‘இந்த சம்பவத்தால் பதற்றம் அடைந்துள்ளீர்களா? என டிரம்பிடம் செய்தியாளர்கள் கேட்டபோது. “என்னை பார்த்தால் பதற்றமாக இருப்பதாக தெரிகிறதா?,” என டிரம்ப் திருப்பி கேட்டார்.
“இது ஒரு எதிர்பாராத சம்பவம் என்றும், ஆனால் தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது” என்றும் டிரம்ப் தெரிவித்தார். சுடப்பட்ட நபர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அமெரிக்க பாதுகாப்பு சேவையால் சுடப்பட்ட நபர் மன நிலை பாதிக்கப்பட்டவரா என்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.