கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய ஆக்கி அணி வீரர் மன்தீப் சிங் ஆஸ்பத்திரியில் அனுமதி!!
![](https://thambattam.com/storage/2020/08/jpg-780x470.jpg)
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கும் இந்திய ஆக்கி அணி பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மையத்திற்கு வரும் 20- ம் தேதி தொடங்க உள்ள தேசிய பயிற்சி முகாமிற்காக கடந்த வாரம் வந்தனர்.
இதில் மன்தீப் சிங், கேப்டன் மன்ப்ரீத் சிங், சுரேந்தர் குமார், ஜஸ்கரன் சிங், வருண் குமார், கோல் கீப்பர் பதக் ஆகியோருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டது. பெங்களூருவில் தேசிய முகாமுக்கு இவர்கள் வந்த பிறகுதான் கொரோனா தொற்று ஏற்பட்டது.
![](https://thambattam.com/storage/2020/08/mandeep-singh-300x167.jpg)
இதனால் இவர்களுக்கு இங்கேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது, ஆனால் மன்தீப் சிங்கின் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு திடீரென குறையத் தொடங்கியது. இரவில் அவரது ரத்த ஆக்சிஜன் அளவு இயல்புக்கும் கீழே குறைந்தது. இதனையடுத்து அவர் மிதமான பாதிப்பு நிலையிலிருந்து இன்னும் கொஞ்சம் தீவிர நிலையை எட்டிய நிலையில், எஸ்.எஸ். ஸ்பார்ஷ் மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவருக்கு ஆபத்து ஒன்றும் இல்லை. அவர் உடல் நிலையாகவே உள்ளதாக இந்திய விளையாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
25 வயதாகும் மன்தீப் சிங் இந்தியாவுக்காக 125 ஆட்டங்களில் ஆடி இதுவரை 60 கோல்களை அடித்துள்ளார். 2018 ஆசியசாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியில் இவர் ஆடியது குறிப்பிடத்தக்கது.