குஜராத்தில் ராக்கி கட்டிய அக்காவை கொலை செய்த தம்பிகள்!!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த இளம்பெண் சவுகி அலியாஸ், ராகேஷ் என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். ஆனால்ராகேஷ் திடீரென காலமானார். இதனால் தனியாக வசித்து வந்த சவுகி, ராம்ஸ்வரூப் சாது என்பவரை 2ஆவது திருமணம் செய்து வாழ்ந்து கொண்டிருந்தார்.
அப்பெண்ணின் உடன்பிறந்த தம்பிகள் சஜிஜுல் ஷாயிக் மற்றும் ரோஜாலி ஷாயிக். இதில், சஜிஜூல் என்பவருக்கு திருமணம் முடிந்த நிலையில் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருகிறார். ரோஜாலி எந்த வேலையும் செய்யாமல் வெட்டியாக ஊர் சுற்றி வந்துள்ளார்.

சஜிஜுல் வேறொரு திருமணம் செய்ய முடியாமலும், அவர் திருமணம் முடிந்த பின்னரே தான் திருமணம் செய்யலாம் என ரோஜாலியும் காத்திருந்ததால், தம்பிகள் இருவரும் தனது அக்கா சவுகியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். கொலை செய்த பின்னர் அக்காவின் நகையை திருடி பங்கு போட்டுக்கொள்ளவும் திட்டமிட்டிருக்கின்றனர்.
திட்டமிட்டபடியே, கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி அக்காவின் வீட்டிற்கு இருவரும் சென்றுள்ளனர். அன்றைக்கு ரக்சா பந்தன் என்பதால் அங்கு வந்த தம்பிகள் இருவருக்கும் அக்கா சவுகி ராக்கி கயிறு கட்டியுள்ளார்.
சிறிது நேரம் பேசி, இரவு உணவை சேர்ந்து உண்டபின்னர், சவுகி அவரது அறைக்கு சென்றப்போது பின்னால் சென்ற இருவரும் அவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். பின்னர் அவர் வீட்டிலிருந்த ரூ.6 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் வெள்ளிப்பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இதுதொடர்பாக விசாரித்து வந்த போலீஸார், கொலையாளிகளான சஜிஜுல் ஷாயிக் மற்றும் ரோஜாலி ஷாயிக் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.