நடமாடும் ரேசன் கடைகள் திறக்க அரசாணை வெளியிட்ட தமிழக அரசு!

கொரோனா கால ஊரடங்கு, தடுப்பு பணிகள், நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருந்தாலும், எட்டு மாதங்கள் கழித்து வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு ஆளும் அதிமுக அரசாங்கம் பல்வேறு நலத் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக வீடுகளில் முடங்கி இருக்கும் மக்களுக்கு ஏதுவாக ரேஷன் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கும் நடமாடும் திட்டம் அறிமுகம் செய்துள்ளது.
தற்போது, தமிழகத்தில் ரூ.9.66 கோடியில் 3,501 நடமாடும் அம்மா கடைகளை திறக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் 3,501 நடமாடும் ரேஷன் கடைகள் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதால் சுமார் 5.36 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் இதனால் பயன்பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடமாடும் ரேஷன் கடைகள் செயல்படும் இடம், நேரம், நாட்களுக்கு ஆட்சியர் அனுமதி பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசு கட்டடம், உள்ளாட்சி நிறுவன கட்டடம், மக்கள் கூடும் இடங்களில் நடமாடும் ரேஷன் கடையை திறக்கலாம் என்றும், நடமாடும் ரேஷன் கடைகள் திறக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி ஆகஸ்ட் 20க்குள் அறிக்கை தர வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் இனி ரேசன் கடைகளில் கால்கடுக்க நிற்க வேண்டிய அவசியம் இருக்காது