அமெரிக்காவில் 11000 ஏக்கர் அளவில் கட்டுங்கடங்காமல் பரவி வரும் காட்டுத்தீ!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் பரவி வரும் காட்டுத்தீ 5,000 மடங்கு அதிகரித்துள்ளதால்,  அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு, அங்கிருந்து 40000 மக்களை  வெளிஎற்றியுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் வடக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள தேசிய வனப்பகுதியில் கடந்த புதன் கிழமை காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் 2 மணிநேரத்தில் 10,500 ஏக்கர் அளவிலான காட்டுப்பகுதி தீயால் முழுவதும் எரிந்து சேதம் அடைந்துள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியை சேர்ந்த 1,000 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காற்று வீச்சு இல்லாமலே ஆயிரம் மடங்காக இருந்த காட்டுத்தீ தற்போது 5 ஆயிரம் கடங்காக அதிகரித்து வேகமாக பரவி வருவதாகவும், இதனால் தீயை அணைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும் தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x