சுத்தம் செய்ய குளியலறைக்குள் சென்று, சடலமாக வெளியே வந்த பெண்! அதிர்ச்சியூட்டும் சம்பவம்!

லண்டனில் குளியலறையை சுத்தம் செய்த பெண் சில நிமிடங்களில் கீழே சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனின் பெல்தாமை சேர்ந்தவர் சிலியா சேமூர். இளம்பெண்ணான இவர் அட்லான்டிகோ ஹேன்ட் கார் வாஷ் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் வீட்டு குளியலறையை சுத்தம் செய்த சிலியாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே உயிர் பிரிந்தது.
இது குறித்து சிலியாவின் தாயார் கூறுகையில், “என் அன்பு மகளை இழந்துவிட்டேன், அவர் ஆஸ்துமாவால் உயிரிழந்துள்ளார். நான் எல்லோருக்கும் எச்சரிப்பது என்னவென்றால், சுத்தம் செய்யும் போது பீளிச் பொடியுடன் வேறு பொருட்களை கலக்காதீர்கள், அது தான் சிலியாவின் உயிர் பறி போனதற்கு காரணம்” என எச்சரித்துள்ளார்.
இந்த நிலையில் சிலியா பணிபுரிந்த நிறுவனத்தின் உரிமையாளர் பீட்டர் செப்ரி அவர் நினைவாக தனது நிறுவனத்தின் பெயரை ‘சிலியா ஹேண்ட் கார் வாஷ்’ என மாற்றி உயிரிழந்த தனது நிறுவன பணியாளருக்கு மரியாதை செய்துள்ளார்.