30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை விடுதலை செய்ய வலியுறுத்திய தமிழ் திரையுலக பிரபலங்கள்!!

30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும்  பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என தமிழ் திரையுலகைச் சேர்ந்த பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் விடுதலையை வலியுறுத்தும் வகையில், #Release perarivalan என்ற ஹேஷ்டேக், ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. திரைப்பட இயக்குநர்கள், நடிகர்கள் என பலரும் பேரறிவாளன் விடுதலையை வலியுறுத்தி வருகின்றனர்.

இயக்குநரும், நடப்பு தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், பேரறிவாளனின் விடுதலைக்காக 30 ஆண்டுகளாக அற்புதம்மாள் சட்டப் போராட்டம் நடத்தி வருவது வேதனைக்குரியது என குறிப்பிட்டுள்ளார். ஆளுநர் மற்றும் ஆட்சியாளர்கள் மனது வைத்து மனது வைத்து உடனடியாக விடுதலை செய்யுமாறு மன்றாடி கேட்டுக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

இயக்குநர் சமுத்திரகனி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஆளுநரை சந்தித்து பேரறிவாளன் விடுதலை கோப்பில் முதலமைச்சர், உடனே கையெழுத்து பெற்றிட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

சட்டம் தன் வாசலை திறந்த பின்னும், அரசியல் காரணங்களால் விடுதலையை மறுப்பது அநீதி என இயக்குநர் பா.ரஞ்சித், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் பிரகாஷ்ராஜ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஆயிரம் குற்றவாளிகள் தப்பலாம், ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட கூடாது. தீர்ப்புக்குப் பின்னும் மறுவிசாரணைக்கான சட்டங்கள் நம் நாட்டில் இருக்குமானால், இந்த அதிகாரியின் வாக்குமூலத்தையடுத்து பேரறிவாளன் சட்டப்படி குற்றமற்றவராக விடுதலையாகி இருப்பார். ஆனால் அவருடைய விடுதலைக்காக நடைமுறையில் இருக்கும் சட்டங்களையே நம்பவேண்டியிருக்கிறது” என வேதனை தெரிவித்துள்ளார்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒரு குற்றமும் செய்யாதவர், 30 ஆண்டுகளாக சிறையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மகனை மீட்க ஒரு தாய் 30 ஆண்டுகளாக போராடி வருவதாகவும் தெரிவித்துள்ள கார்த்திக் சுப்புராஜ், முதலமைச்சர், ஆளுநரை வலியுறுத்தி நீதி கிடைக்க செய்ய வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.

நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி, “நிரபராதியான சகோதரர் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும். உச்சநீதிமன்றம் விடுதலை செய்ய வேண்டும் என்று கூறிய பிறகும் தாமதிப்பது நீதியல்ல” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“நீதி, நியாயம், சட்டம், தர்மம்,அத்தனையையும் தாண்டி, கால் நூற்றாண்டு கடந்தும் கண்ணீரோடு போராடும் ஒரு தாயின் தவிப்பை பாருங்கள். சிறை தண்டைனையில் அல்லாடுவது பேரறிவாளன் மட்டுமல்ல, தாய் அற்புதம்மாளும் தான்”  என நடிகர் ஆர்யா, ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதே போல “உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும்” என நடிகர் விஜய் சேதுபதி கோரிக்கை வைத்துள்ளார். ”

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தனது பதிவில், “போதும் இந்த நீண்ட நெடிய சிறைவாசம்.. குற்றமிழைக்காமலே 30 ஆண்டுகால மிக கொடுமையான சிறைவாசம்..போதும்…! என தமிழினமே ஒன்றுபட்டு சொல்கிறோம். பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய ஆளுநர் அவர்கள் ஆவணம் செய்ய வேண்டும்!” என்று வலியுறுத்தியுள்ளார்.

இயக்குநர் ராஜூமுருகனின் ட்விட்டர் பதிவில், “அற்புதம் அம்மாளின் 30 வருட கண்ணீரை துடைத்து, பேரறிவாளன் விடுதலை உடனே சாத்தியப்படுத்துங்கள்” என முதலமைச்சரையும், ஆளுநரையும் வலியுறுத்தியுள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x