“தீங்கு விளைவிக்கக் கூடாது என்ற நெறிமுறையை ரஷ்ய தடுப்பூசி மீறியுள்ளது”

தடுப்பூசிகள் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது என்ற அடிப்படை நெறிமுறையை ஸ்புட்னிக் 5 தடுப்பூசி மீறியுள்ளதாக சுகாதார அமைச்சத்தின் நெறிமுறை ஆலோசனை குழு உறுப்பினர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.
ரஷ்யா கடந்த 11-ம் தேதி உலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசியை பதிவு செய்வதாக அறிவித்தது. உடனே உலக நாடுகள் அந்த தடுப்பூசியின் மீது சந்தேகம் கிளப்பின. நம்பகத்தன்மையை பெற வேண்டும் என்பதற்காக தனது மகளுக்கே கொரோனா தடுப்பூசி செலுத்தினார் அதிபர் புடின். ஆரம்பத்தில் காய்ச்சல் ஏற்பட்ட பின் நோய் தடை காப்பு மண்டலம் தூண்டப்பட்டதாக கூறினார்.
இந்த நிலையில் ரஷ்யாவின் மூத்த நுரையீரல் மருத்துவரும், சுகாதார அமைச்சத்தின் நெறிமுறை ஆலோசனை குழு உறுப்பினருமான அலெக்சாண்டர் என்பவர் திடீரென ராஜினாமா செய்துள்ளார். இவர் ரஷ்ய தடுப்பூசி அந்நாட்டு சட்டத்தையும் மதிக்கவில்லை, நெறிமுறைகளையும் பின்பற்றவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். இரண்டு விஞ்ஞாணிகளின் முடிவால் தடுப்பூசி அவசர கதியில் பதிவு செய்யப்பட்டதாகவும், அதனை தான் தடுக்க முயன்று தோல்வியுற்றதாகவும் பேட்டியளித்துள்ளார்.