பள்ளி திறந்த இரண்டே வாரத்தில் 97 ஆயிரம் குழந்தைகளுக்கு கொரோனா…! அதிர்ந்து போன துணை முதல்வர்!
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மத்திய உயர்கல்வி செயலாளர் சமீபத்தில் பேட்டியளித்த போது வரும் டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் அமெரிக்காவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாக இருக்கும் நிலையிலும் சமீபத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டது. ஆனால் அமெரிக்காவில் பள்ளிகள் திறக்கப்பட்ட இரண்டே வாரங்களில் சுமார் 97 ஆயிரம் குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
இந்த தகவலை தில்லி மாநில துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா அவர்கள் தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். மேலும் அவர், “இதனை இந்திய அரசின் கல்வித்துறை மற்றும் யுஜிசி அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பழைய நடைமுறைகளை பின்பற்றினால் பெரும் பாதிப்பு ஏற்படும். அமெரிக்கா போன்று பள்ளி திறப்பதில் அவசரப்படாமல் தீவிர ஆலோசனைக்குப் பின்னரே பள்ளிகள் திறக்கும் முடிவில் ஈடுபடவேண்டும்” என்று அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிபிட்டுள்ளார்.