உலகின் முதல் கொரோனா தடுப்பூசி உற்பத்தி துவங்கியது!

ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக் வி என்ற கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் கட்ட தொழிற்சாலை உற்பத்தி துவங்கியுள்ளது. ஆகஸ்ட் இறுதியில் இவை முன்கள பணியாளர்களுக்கு கிடைக்கும்.
ரஷ்யாவின் காமாலேயா ஆராய்ச்சி நிறுவனமும், பாதுகாப்பு அமைச்சகமும் இணைந்து அந்நாட்டின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசியை தயாரித்துள்ளன. கடந்த 11-ம் தேதி அந்நாட்டு அதிபர் புதின் அதிகாரப்பூர்வமாக இத்தவலை அதிபர் புடின் வெளியிட்டார்.
ரஷ்யாவின் இந்த தடுப்பூசி குறித்து வல்லரசு நாடுகள் சந்தேகம் கிளப்பியுள்ளன. கெளரவத்திற்காக அவசர கதியில் தடுப்பூசியை அறிவித்திருப்பதாக குற்றம்சாட்டியுள்ளன. இது போன்ற சர்ச்சைகளை தடுக்கவே தனது மகளுக்கு இத்தடுப்பூசியை செலுத்தியுள்ளார் புடின். இத்தடுப்பூசி கொரோனாவிலிருந்து 2 ஆண்டுகள் பாதுகாப்பு அளிக்குமாம்.
இந்நிலையில் தடுப்பூசிக்கான தொழிற்சாலை உற்பத்தியை ரஷ்யா துவங்கியுள்ளது. முதலில் அந்நாட்டு மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் போன்ற முன்கள வீரர்களுக்கு தடுப்பூசி அளிக்கப்படும். பின்னர் அனைத்து ரஷ்யர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என அந்நாட்டு சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. ஏற்கனவே 100 கோடி தடுப்பூசிகளுக்கான விண்ணப்பங்களை உலக நாடுகளிடமிருந்து ரஷ்யா பெற்றுள்ளது