தல மற்றும் சின்ன தலயின் ஓய்வு அறிவிப்பும், அவர்களது அன்பு மனைவிகளின் ஆறுதல் வார்த்தைகளும்!!!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர நாயகன், கோடிக்கணக்கான ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு காரணமாக திகழ்ந்தவர் தோனி. இவரின் ஆட்டத்தை பார்க்கவும், இவரின் ஆட்டத்தை பார்த்து ரசிக்கவும் வேண்டி மட்டுமே கிரிக்கெட் பார்க்கும் நபர்கள் ஏராளம் உள்ளனர். இந்த நிலையில், இவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். இந்த செய்தி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

சமூக வலைதள பக்கங்கள், வாட்சப் ஸ்டேடஸ்கள் என அனைத்திலும் தோனி விடைபெற்ற பதிவுகளே பார்க்கவும் முடிந்தது. இப்படி விளையாட்டு உலக ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்த தோனி, தனிப்பட்ட முறையில் மிகுந்த வருத்தம் கொண்டிருப்பார். ஏன் என்றால் ரசிகர்களுக்கும், அவருக்கும் இடையே உள்ள பந்தம் உணர்ச்சிபூர்வமானது.

இந்தநிலையில், அவரின் மனைவி சாக்ஷி இது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “உங்கள் சாதனை குறித்து நீங்கள் பெருமை படுங்கள். நீங்கள் விரும்பிய இந்த விளையாட்டுத்துறைக்கு உங்களின் மிகுந்த பங்களிப்பை வழங்கியுள்ளீர்கள் அதற்கு வாழ்த்துக்கள்.

சாதனைகளை படைத்துள்ள உங்கனை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். அதிதீவிரமாக விரும்பிய இந்த விளையாட்டில் இருந்து நீங்கள் விடைபெறும்போது எவ்வளவு கண்ணீரை கட்டுப்படுத்தி இருப்பீர்கள் என்பதை நான் அறிவேன். உங்களின் மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் எனக்கு முக்கியம். உங்கள் முன் இன்னும் பல விஷயங்கள் உள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “நீங்கள் சொன்னதையும், செய்ததையும் மக்கள் மறந்துவிடுவார்கள் ஆனால் நீங்கள் உருவாக்கிய உணர்வுகளை ஒருபோதும் மறக்க மாட்டார்கள்” என மாயா ஆங்கிலோ சொன்ன தத்துவத்தையும் சாக்ஷி உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.

இதேபோல் தோனியை தொடர்ந்து ஓய்வை அறிவித்த சக வீரர் சுரேஷ் ரெய்னாவின் மனைவியும் தனது கணவரின் ஓய்வு அறிவிப்பை குறித்து பதிவிட்டுள்ளார். அவர், “நான் இதை இன்னும் கடினப்பட்டு ஏற்றுக்கொண்டுதான் இருக்கிறேன். வலியாய் இருந்தாலும் மகத்தான பெருமையும் இருப்பதாய் உணர்கிறேன்  என்று நான் சொல்ல முடியும். என் இதயம் மரியாதை மற்றும் நன்றியுணர்வால் நிரம்பியுள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x