“நன்றி தோனி” – கமல்ஹாசன் டிவிட்
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்று தோனி தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார் .இனி ஒருநாள் மற்றும் டி20 என்று எந்த போட்டியிலும் விளையாட மாட்டார்.ஏற்கனவே இவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
இந்த நிலையில் தோனியின் ஓய்வு குறித்து பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், அரசியல்தலைவர்கள் டிவிட் செய்து வருகிறார்கள்.தோனியின் ஓய்வு குறித்து நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டிவிட் செய்துள்ளார்.
அதில், அன்புள்ள எம்.எஸ் தோனி, வாழ்க்கையிலும் விளையாட்டிலும் சாதனை புரிய தன்னம்பிக்கை எப்படி உதவும் என்று விளக்கியதற்கு நன்றி தோனி . சிறிய நகரத்தில் இருந்து வந்து, இந்தியாவின் ஹீரோவாக மாறியுள்ளீர்கள். உங்களின் சரியான திட்டமிடல் மற்றும் சாந்தமான செயலை இந்திய அணி மிஸ் செய்யும்.
சென்னை உடனான உங்களின் காதல் கதை எப்போதும் தொடரும் என்பது சந்தோசம் அளிக்கிறது, என்று கமல்ஹாசன் தனது டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றாலும், சென்னை அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடுவார். இதைத்தான் கமல்ஹாசன் தனது டிவிட்டில் குறிப்பிட்டு சந்தோசப்பட்டு உள்ளார்.