பள்ளிகள் திறந்த இரண்டே வாரத்தில் ஒரு லட்சம் மாணவர்களுக்கு கொரோனா! அதிர்ச்சியில் அமெரிக்கா!!
![](https://thambattam.com/storage/2020/08/1596627524_untitled-design-4-780x470.jpg)
கொரோனா தொற்று காரணமாக நமது நாட்டில் கடந்த ஐந்து மாதமாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. டிசம்பர் மாதம் வரை கல்வி நிறுவனங்கள் திறக்கப்படாது என மத்திய அரசு கூறியுள்ள நிலையில் தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவிலிருந்து ஒரு அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. உலக சுகாதார மையத்தின் எச்சரிக்கையை மீறி அமெரிக்காவில் பள்ளிகளை திறக்க அதிபர் டிரம்ப் திறக்க உத்தரவிட்டார். அதன்படி பள்ளிகள் திறக்கப்பட்டது. அவசரப்பட்டு பள்ளிகளை திறந்ததால் ஜூலை 15 முதல் ஜூலை 30 ம் தேதி வரை அங்குள்ள பள்ளிக்கு வந்த மாணவ, மாணவியர்களுக்கு கொரானா பரிசோதனை மேற்கொண்டதில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்ட செய்தி கேட்டு அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர் .
இது குறித்து அமெரிக்க சில்ட்ரன்ஸ் அஸோஸியேஷன் என்ற அமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி, “கிட்டத்தட்ட 3 லட்சத்து 38 ஆயிரம் குழந்தைகள் கொரானா தொற்றால் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் இந்த நோய் தொற்றால் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை மிக குறைவு” என்றும் அது கூறியுள்ளது.
அந்த நாட்டில் ஒரு பகுதியில் பள்ளிகள் திறந்த 15 நாளைக்குள் இப்படி 1 லட்சம் பள்ளி மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், அரசு அந்த நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளையும் திறக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது. இந்த அறிவிப்பால் அந்த மாணவர்களின் நிலையை எண்ணி மிகவும் கவலையடைந்த அந்த குழந்தைகள் அமைப்பு, அவசரப்பட்டு பள்ளிகளை திறக்க வேண்டாம் இப்போது இருப்பது போல ஆன்லைன் வகுப்புகளையே தொடர அரசுக்கு அந்த அமைப்பு பரிந்துரை செய்துள்ளது .
சுகாதார வசதி அதிகம் கொண்ட அமெரிக்காவிலலேயே பள்ளி திறந்த 15 நாட்களில் ஒரு லட்சம் மாணவர்களுக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றால் தற்போது கொரோனா தொற்று காட்டுத் தீ போல பரவி வரும் இந்தியாவில் பள்ளிகள் திறந்தால் என்னாகும் என்று நினைத்து கூட பார்க்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்பதே நிதர்சனமான் உண்மை.