“வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று கரையை கடக்கும்!” இந்திய வானிலை மையம் அறிவிப்பு!

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்குவங்கம் மற்றும் வங்கதேச கடற்கரை அருகே இன்று கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், “மேற்கு மத்திய வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக, ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு இந்தியாவில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்து வருகிறது.
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை நிலவரப்படி மேற்குவங்கம் – வங்கதேச கடற்பகுதிக்கு வட மேற்கே நிலை கொண்டுள்ளது. இதுமேலும் நகர்ந்து மேற்குவங்கம் மற்றும் வங்கதேச கடற்கரையையொட்டி சுந்தர வனக் காடுகள் அருகே இன்று கரையை கடக்கக்கூடும்.
அசாம் மற்றும் மேகாலயா மாநிலங்களில் சில பகுதிகளில் அக்டோபர் 23-ம் தேதி அன்று பலத்த மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது.” இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.